நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: அயர்லாந்தில் இருந்தபடியே வெற்றியை கொண்டாடிய டீம் இந்தியா!
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து அயர்லாந்தில் உள்ள இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி இன்றைய 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் நேரலையை தொலைக்காட்சியில் பார்த்தவாறு இந்திய வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
இந்த வீடியோவை பிசிசிஐ தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதே மகிழ்ச்சியுடன் இன்று அயர்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டியில் விளையாட இருக்கின்றனர். இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடக்க உள்ள முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த முகாம் வரும் 29 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
இதையடுத்து வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இந்த தொடரானது வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 2ஆம் கட்ட போட்டி தொடங்கியது: வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?