Asianet News TamilAsianet News Tamil

BBL: சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய பிரிஸ்பேன் ஹீட்

பிக்பேஷ் லீக் தொடரின் ஃபைனலுக்கு பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முன்னேறிய நிலையில், மற்றொரு ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை 20 ஓவரில் 116 ரன்களுக்கு சுருட்டியது பிரிஸ்பேன் ஹீட் அணி.
 

brisbane heat restricts sydney sixers for just 116 runs in big bash league challenger match
Author
First Published Feb 2, 2023, 3:50 PM IST

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிஃபயர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

குவாலிஃபயரில் தோற்ற சிட்னி சிக்ஸர்ஸும் நாக் அவுட் போட்டியில் ஜெயித்த பிரிஸ்பேன் ஹீட் அணியும், மற்றொரு ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டியில் இன்று ஆடிவருகின்றன. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

SA vs ENG: பட்லர் அபார சதம்.. ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்.. கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), குர்டிஸ் பாட்டர்ர்சன், டேனியல் ஹியூக்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், ஹைடன் கெர், டேனியல் கிறிஸ்டியன், பென் துவர்ஷுயிஸ், சீன் அபாட், ஸ்டீவ் ஓ கீஃப், இஸாருல்ஹக் நவீத்.

பிரிஸ்பேன் ஹீட் அணி:

சாம் ஹீஸ்லெட், ஜோஷ் பிரௌன், நேதன் மெக்ஸ்வீனி, சாம் ஹைன், ஜிம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மேக்ஸ் பிரயண்ட், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ குன்னெமேன். 

முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர்கள் யாரையும் நிலைத்து நின்று அடித்து ஆட பிரிஸ்பேன் ஹீட் அணி பவுலர்கள் அனுமதிக்கவில்லை. சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பாட்டர்சன் 19 ரன்னிலும், ஜோஷ் ஃபிலிப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டேனியல் ஹியூக்ஸ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜோர்டான் சில்க் 10 ரன்னும் ஹைடன் கெர் 16 ரன்னும் மட்டுமே அடித்தனர். 

கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பவுலிங்கை திறம்பட அடித்து ஆடமுடியாமல் 20 ஓவரில் 116 ரன்கள் மட்டுமே அடித்தது. பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் குன்னெமேன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா   3 விக்கெட் வீழ்த்தினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios