இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் விலகினார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் கேரி கிறிஸ்டனும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.

ஆனால் இப்போது மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரண்டன் மெக்கல்லம் ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதால், கேகேஆர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டும்.
