சர்வதேச கிரிக்கெட்டில் பொருளாதார ரீதியில் மிகவும் சிறப்பான கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ. பிசிசிஐ தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கோலோச்சுகிறது. ஆனால் சில நேரங்களில் சரியான திட்டமின்மையால் அசிங்கப்பட நேர்கிறது. 

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் இறுதி போட்டி சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியின் முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் இரு அம்பயர்களில் ஒருவரான ஷாம்ஷுதீனுக்கு வீரர்கள் த்ரோ விட்டதில் அடிபட்டது. அதனால் அவர் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அம்பயரிங் செய்ய வரவில்லை. அம்பயர் சுந்தரம் ரவி டிவி அம்பயராக இருக்கிறார்.  எனவே பியூஷ் கக்கர் என்ற அனுபவமில்லாத அம்பயர் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

அவருக்கு அனுபவம் இல்லை என்பதால், அவர் ஸ்கொயர் லெக் அம்பயராக மட்டுமே நிறுத்தப்பட்டார். மற்றொரு அம்பயரான ஆனந்த பத்மநாபன் தான் பவுலிங் முனையில் மெயின் அம்பயராக நின்று அம்பயரிங் செய்தார். வழக்கமாக இரு அம்பயர்களும், பவுலிங் முனையிலும் லெக் திசையிலும் மாறி மாறி தான் நிற்பார்களே தவிர ஒரே இடத்தில் நிற்கமாட்டார்கள். ஏனெனில் லெக் திசையில் நிற்கும் அம்பயருக்கு பெரிதாக வேலையாக இருக்காது. அதனால் இரண்டு அம்பயர்களும் மாறி மாறி தான் நிற்பார்கள். 

ஆனால் பியூஷ் கக்கர் அனுபவமில்லாதவர் என்பதால் அவரை நம்பி பவுலிங் முனையில் நிற்கவைக்க முடியாது. அதனால் அவரை கம்முனு லெக் திசையில் நிற்கவைத்துவிட்டு, ஆனந்த பத்மநாபனே பவுலிங் முனையில் அம்பயரிங் செய்துவருகிறார். இது மிகவும் கடினமானது. ஏனெனில் கொஞ்சம் கூட ரிலாக்ஸே இல்லாமல் முழுக்க முழுக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். அது மிகவும் கடினமானது. 

Also Read - பிரிந்துபோன காதலி திரும்பி வர வேண்டாம், வேலை கூட வேண்டாம்!!ஆனால்... இவங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே... வீடியோ

பிசிசிஐயின் முறையான திட்டமின்மையால், அம்பயர் ஆனந்த பத்மநாபனுக்கு வேலைப்பளு அதிகமாகியுள்ளது. டி20 போட்டிகளாக இருந்தால் கூட பரவாயில்லை. ரஞ்சி போட்டியில் ஒரு நாள் முழுவதும் 90 ஓவர்களுக்கு ஒரே அம்பயர் அம்பயரிங் செய்வது ரொம்ப கஷ்டமான காரியம். நாள் முழுக்க, முழு கவனத்துடன் செயல்படுவது, அவருக்கு அழுத்தத்தை அதிகரிக்கும்.