ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்து 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ளது. 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று சீசன்களிலும் இறுதி போட்டிவரை சென்ற ஆர்சிபி அணி, இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கே கேப்டனாக இருக்கும் விராட் கோலியால் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்பது அவரது கேப்டன்சியின் மீதான விமர்சனத்துக்கும் வழிவகுக்கிறது. 

ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லையென்றாலும், அந்த அணியின் ரசிகர்கள், ஒவ்வொரு சீசனிலும், ”ஈ சாலா கப் நம்தே”(இந்த தடவை கப் நமக்குத்தான்) என்ற வாசகத்துடன் முதல் கோப்பைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Also Read - நான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடமாட்டேன்.. ஐபிஎல்லில் இருந்து அதிரடியாக விலகிய இங்கிலாந்து வீரர்

இந்நிலையில், ஆர்சிபி அணியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், மைசூரு சாமுண்டி மலையின் மேல் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆர்சிபி அணி வெல்ல வேண்டும் என பூஜை செய்துள்ளார். பிரிந்து போன எனது காதலி திரும்ப வர வேண்டாம்.. எனக்கு வேலை கூட வேண்டாம்.. ஆனால் ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கணும் தாயே.. என்று சாமுண்டீஸ்வரி கோவிலில் வேண்டியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.