Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் போட்டிகளில் அவங்க 2 பேருக்கும் ஆடும் லெவனில் இடமில்லை.. வலுவான இந்திய அணி காம்பினேஷன் இதுதான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் இந்திய அணி காம்பினேஷன் குறித்து பார்ப்போம்.
 

best odi team combination that is probably will be play against south africa
Author
India, First Published Mar 9, 2020, 2:47 PM IST

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி வரும் 12ம் தேதி தர்மசாலாவில் நடக்கவுள்ளது. 2 மற்றும் 3வது போட்டிகள் முறையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் 15 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளன. 

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடாத ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் காயத்திலிருந்து மீண்டும் முழு உடற்தகுதியுடன் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். 

best odi team combination that is probably will be play against south africa

15 வீரர்களை கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்.

இவர்களில் ஆடும் லெவனில் யார் யார் இருப்பார்கள் என்று பார்ப்போம். தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் பிரித்வி ஷாவும் இறங்குவார்கள். கேஎல் ராகுல் ஒருநாள் போட்டியில் ஐந்தாம் வரிசையில் தான் இறங்குவார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதால், அவர் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பில்லை. மூன்றாம் வரிசையில் கோலி, நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், ஐந்தாம் வரிசையில் ராகுல் ஆகியோர் இறங்குவார்கள்.

best odi team combination that is probably will be play against south africa

ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிவிட்டதால், அவர் ஆறாம் வரிசையில் இறங்குவார். கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதால் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இருக்கமாட்டார். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் அணியில் இருப்பார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் ஆடுவார்கள். மூன்றாவது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அதனால் இன்னொரு ஃபாஸ்ட் பவுலர் தேவையில்லை என்பதால் நவ்தீப் சைனி ஆடும் லெவனில் இருக்கமாட்டார். 

best odi team combination that is probably will be play against south africa

புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், குல்தீப், ஹர்திக் என கரெக்ட்டாக ஐந்து பவுலர்களுடன் ஆடமுடியாது. அதனால் ஜடேஜாவும் அணியில் இருப்பார். ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டரான ஜடேஜாவின் பேட்டிங் அண்மைக்காலமாக மேம்பட்டிருக்கிறது. எனவே அவரும் சிறப்பாக பேட்டிங் ஆடக்கூடியவர் என்பதால், ஜடேஜா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார். ஜடேஜா, குல்தீப், சாஹல் ஆகிய 3 ஸ்பின்னர்கள், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்கள் என்பதால் டீம் காம்பினேஷன் சரியாக இருக்கும்.

best odi team combination that is probably will be play against south africa

வெறும் பேட்டிங் ஆடும் பேட்ஸ்மேனை எடுப்பதைவிட ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்தவகையில் இதுதான் இந்திய அணியின் பெஸ்ட் ஆடும் லெவன் காம்பினேஷனாக இருக்கும்.

ஷுப்மன் கில், நவ்தீப் சைனி ஆகிய இருவருக்கும் கண்டிப்பாக அணியில் இடம் கிடைக்காது. மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் வெறுமனே பேட்டிங் மட்டும்தான் ஆடுவார்கள். எனவே இவர்களில் ஒருவரை ஆடும் லெவனில் எடுத்தால், சரியாக ஐந்து பவுலர்களுடன் ஆட நேரிடும். இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட விரும்பாது. அவர்கள் ஆட வாய்ப்பில்லை. 

best odi team combination that is probably will be play against south africa

Also Read - பந்தை சுழற்றவே தெரியாதவனுக்குலாம் இந்திய அணியில் இடம்.. தமிழ்நாட்டு ஸ்பின்னரை மட்டம்தட்டிய முன்னாள் வீரர்

இந்திய அணியின் ஆடும் லெவன்:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா.

பென்ச்: மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், நவ்தீப் சைனி.

முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டால், ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்படும். அல்லது பிரித்வி ஷா சொதப்பினால் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios