சிவகாசி பட்டாசு மாதிரி வெடித்து தள்ளிய பென் ஸ்டோக்ஸ்: ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 182 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடியது. இதில் இரு அணிகளும் 2-2 என்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன. இதையடுத்து 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 79 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
பாகிஸ்தானை விட இலங்கை உடன் தான் இந்தியா சிறப்பாக விளையாடியது – கௌதம் காம்பீர்!
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், நியூசி, வீரர் டிரெண்ட் போல்ட் பந்தில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 4 ரன்களில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்; காயம் காரணமாக அகா சல்மான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகல்?
அதன் பிறகு டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து நியூசிலாந்து பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதில், ஒரு கட்டத்தில் மலான் 96 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆனால், பென் ஸ்டோக்ஸ் மட்டும் நங்கூரம் போன்று நின்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். சிவகாசி பட்டாசு மாதிரி படபடவென வெடித்த ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது 4ஆவது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.
அதன் பிறகு 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்னும் 22 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சரமாரியாக அதிரடியாக விளையாடி 182 ரன்கள் குவித்து புதிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார். அவர், 124 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உள்பட மொத்தமாக 182 ரன்கள் குவித்தார்.
இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் பெற்றுள்ளார். 2ஆவது இடத்தில் ஜேசன் ராய் 180 ரன்களுடன் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான அட்டவணை: செப்.21ல் கேரளா – பெங்களூரு பலப்பரீட்சை!
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். இந்த நிலையில், தற்போது செப்டம்பர் 13, 2023 ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது.
தலைவரே நீங்களா.. கிங் விராட் கோலியின் உருவத்தை நாக்கால் வரைந்த ரசிகர் | வைரல் வீடியோ
நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஒரு நாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். பென் லிஸ்டெர் 3 விக்கெட்டும், லாக்கி ஃபெர்குசன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.