இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. இரண்டாவது போட்டியை டிரா செய்ய முனைந்த தென்னாப்பிரிக்க அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது பென் ஸ்டோக்ஸ் தான். 

இந்நிலையில், போர்ட் எலிசபெத்தில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட்டில் பேட்டிங்கில் அசத்திவருகிறார் பென் ஸ்டோக்ஸ். நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ஓலி போப்பும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகின்றனர். களமிறங்கியது முதலே கவனமாகவும் தெளிவாகவும் ஷாட்டுகளை எல்லாம் நேர்த்தியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அடுத்த சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 100க்கும்(142) அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய சிறந்த ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார். 

Also Read - ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை.. ஆம்லா, டெண்டுல்கரை அடித்து துவம்சம் செய்த தரமான சம்பவம்

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஓலி போப்பும் சிறப்பாக ஆடிவருகிறார். அவரும் சதத்தை நெருங்கிவிட்டார். ஸ்டோக்ஸும் போப்பும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு, இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை  187ரன்கள்  அடித்து ஆடிவருகின்றனர்.