இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் போட்டி போட்டு சாதனைகளை படைத்துவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சாதனைகளை குவித்துவருகின்றனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

Also Read - சுயநலத்தோட ஆடுன நிறைய வீரர்களை என் கெரியரில் பார்த்துருக்கேன்.. ஆனால் கோலி கிரேட்.. மனதார பாராட்டிய கம்பீர்

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 81 ரன்கள் அடித்தனர். 44 பந்தில் 42 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் ரோஹித் சர்மா தொடக்க வீரராக 7000 ரன்களை கடந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக தனது 137வது இன்னிங்ஸில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விரைவில் 7000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 

Also Read - ரபாடாவுக்கு தடை.. தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்த அடி

தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா 147 இன்னிங்ஸ்களிலும் சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர்.