சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவருபவர்.
ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் முதல் & ஒரே இந்திய வீரர்..! ஹர்திக் பாண்டியா வரலாற்று சாதனை.. ஷேன் வாட்சனுடன் இணைந்தார்
3 விதமான போட்டிகளிலும் இங்கிலாந்தின் மேட்ச் வின்னராக இருந்துவந்த பென் ஸ்டோக்ஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.
2011ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஆடிவரும் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்துக்காக 101 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 2871 ரன்களை குவித்திருப்பதுடன், 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது, அந்த இங்கிலாந்து அணியில் முக்கிய அங்கம் வகித்தவர் பென் ஸ்டோக்ஸ்.
இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி இழந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து நாளை(ஜூலை19) ஆடும் முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டோக்ஸ் தொடர்ந்து ஆடுவார்.
