Asianet News TamilAsianet News Tamil

ENG vs SA 2வது டெஸ்ட்: ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் அபார சதங்கள்..! இங்கிலாந்து மெகா முன்னிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 415 ரன்களை குவித்து மெகா முன்னிலையை பெற்றுள்ளது.
 

ben stokes and ben foakes centuries help england to lead 264 runs in first innings of second test against south africa
Author
First Published Aug 27, 2022, 2:33 PM IST

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது.

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாகவே டெயிலெண்டர் ககிசோ ரபாடா தான் 36 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே அந்த ரன் கூட அடிக்காமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 38 ரன்கள் அடித்தார். ஆலி போப் 23 ரன்களும்,சீனியர் வீரர் ஜோ ரூட் 9 ரன்களும் மட்டுமே அடித்தனர். நன்றாக ஆடிய பேர்ஸ்டோ 49 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, 147 ரன்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 173 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சதமடித்த பென் ஃபோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 113 ரன்களை குவித்தார். 

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் சதங்களால்  முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை விட  264 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

264 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios