MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை  முன்னாள் வீரர் சபா கரிம் தேர்வு செய்துள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 26 2022, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது.
 

210

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் சபா கரிம் தேர்வு செய்துள்ளார். அதன்படி ரோஹித் சர்மா - ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். கண்டிப்பாக ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: ஷாஹீன் அஃப்ரிடியை தொடர்ந்து மற்றொரு ஃபாஸ்ட் பவுலர் காயம்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி

310

3ம் வரிசை வீரராக விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
 

410

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார் சபா கரிம். தினேஷ் கார்த்திக்கை புறக்கணித்துள்ளார். 

510

தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்தால் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆட நேரிடும். 
 

610

அது சரியாக வராது. 5 பவுலர்களுடன் ஹர்திக் பாண்டியா 6வது பவுலிங் ஆப்சனாக இருப்பதுதான் அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும். 

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியின் பெரிய குறை இதுதான்..! அதைக்கூட கண்டுபிடிக்காமல் ஆட வந்துட்டாங்க
 

710

எனவே  தினேஷ் கார்த்திக்கை எடுக்கவில்லை. தினேஷ் கார்த்திக் தான் ஃபினிஷர் என சமீபத்தில் அவருக்கு ஆசை காட்டப்பட்டநிலையில், ஆடும் லெவனில் அவரை சேர்க்கும் சூழல் இல்லை என்பதால்,ஆசை காட்டி மோசம் செய்யப்பட்டார் தினேஷ் கார்த்திக்.
 

810

ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும் சபா கரிம் தேர்வு செய்துள்ளார்.
 

910

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

1010

சபா கரிம் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
Recommended image2
6 மாதமாக மதுபானத்தை தொடாத இந்திய வீரர்.. மீண்டும் அணிக்கு திரும்புவேன் என சபதம்!
Recommended image3
IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved