பிசிசிஐ விருது வழங்கும் விழா வரும் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 2006-07 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டது. C. K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன்முதலில் 1994 இல் வழங்கப்பட்டது. இது ஒரு முன்னாள் வீரருக்கு BCCI வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.

3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறும் ருதுராஜ் கெய்க்வாட் – முதல் 2 போட்டியில் ஓய்வு!

இதுவரையில் சச்சின் டெண்டுல்கர், அஜிங்கியா ரகானே, ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி, வீரேந்தர் சேவாக், சட்டேஷ்வர் புஜாரா, மந்தீப் சிங், புவனேஷ்வர் குமார், மிதாலி ராஜ், கௌதம் காம்பீர், பூனம் ராவுத், ராகுல் டிராவிட், மணீஷ் பாண்டே, அபிமன்யூ மிதுன், சூர்யகுமார் யாதவ் என்று பலரும் பல்வேறு பிரிவுகளில் பிசிசிஐ விருதுகள் பெற்றுள்ளனர்.

இன்னும் 18 சிக்ஸர்கள் தான், டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா!

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் – ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென்; 4 ஆண்டுகளில் 4 டெஸ்ட்!

Scroll to load tweet…