டெஸ்ட் கிரிக்கெட் – ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென்; 4 ஆண்டுகளில் 4 டெஸ்ட்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அது டெஸ்ட் என்றில்லாமல் டி20, ஒருநாள் கிரிக்கெட்டி, ஐபிஎல் தொடரிலிருந்தும் வீரர்கள் ஓய்வு அறிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பிறகு அம்பதி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் நடந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் குயீண்டன் டி காக் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
காயம் காரணமாக ஹர்திக், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் டி20 தொடரில் இடம் பெறவில்லை!
இந்த நிலையில் தான் தற்போது தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கிளாசென் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதில், 104 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக அவர் 35 ரன்கள் எடுத்துள்ளார்.
கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அவர் இடம் பெறவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 4 ஆண்டுகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
புரோ கபடி லீக் ஏலத்தில் கிடைத்த ரூ.31.6 லட்சத்தையும் நன்கொடையாக வழங்க இருக்கிறேன் – மாசான முத்து!
தற்போது 32 வயதாகும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தவிர, 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கிளாசென் 1638 ரன்களும், 41 டி20 போட்டிகளில் விளையாடி 710 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 174 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு முடிவு குறித்து கிளாசென் கூறியிருப்பதாவது: "நான் சரியான முடிவை எடுக்கிறேனா என்று யோசித்த சில தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகு, நான் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இது ஒரு கடினமான முடிவு. ஏனென்றால் இது எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும்," என்று அவர் கூறினார். ஒரு அறிக்கை. "ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் சந்தித்த போர்கள் என்னை இன்று கிரிக்கெட் வீரராக ஆக்கியுள்ளது. இது ஒரு சிறந்த பயணம் மற்றும் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
PKL10: 8ஆவது தோல்வி – கடைசி வரை போராடி 3 புள்ளிகளில் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்!