புரோ கபடி லீக் ஏலத்தில் கிடைத்த ரூ.31.6 லட்சத்தையும் நன்கொடையாக வழங்க இருக்கிறேன் – மாசான முத்து!
தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரும் வகையில் ரூ.31.6 லட்சம் நன்கொடையாக வழங்க உள்ளேன் என்று தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசாணமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது 10ஆவது முறையாக புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தமிழ் தலைவாஸ் அணி இடம் பெற்று விளையாடி வருகிறது. இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 10 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 8 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் தான் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசான முத்து லட்சுமணன் கடந்த ஆண்டு தான் சம்பாதித்த ரூ.31.6 லட்சத்தை தூத்துக்குடி மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் அவர்களது வீடுகளை சீரமைக்க நன்கொடையாக வழங்க உள்ளேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மாசான முத்து கூறியிருப்பதாவது: எனது பெற்றோர் அரசு பள்ளியில் தங்கியிருக்கின்றனர். மழை வெள்ளத்தால் பலரும் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர்.
PKL10: 8ஆவது தோல்வி – கடைசி வரை போராடி 3 புள்ளிகளில் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்!
தற்காலிக வீடுகளை அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஆனால், புதிய வீடு கட்டி முடிப்பதற்குள்ளாக நாங்கள் ஒரு குடிசையை கட்ட போகிறோம். எங்களது ஊரைச் சேர்ந்த வி விஸ்வந்துடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி வழங்க உள்ளோம். கடந்த ஆண்டு நடந்த கபடி லீக் ஏலத்தில் நான் சம்பாதித்த ரூ.31.6 லட்சத்தையும் முழுமையாக நன்கொடையாக வழங்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
கடைசி வரை போராடிய இந்தியா, சிக்ஸர் அடித்து வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா மகளிர் அணி: 1-1 சமன்!