கடைசி வரை போராடிய இந்தியா, சிக்ஸர் அடித்து வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா மகளிர் அணி: 1-1 சமன்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா மகளிர் அணி 3-0 என்று கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது.
தட்டு தடுமாறி 130 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி – ஆஸிக்கு 131 ரன்கள் வெற்றி இலக்கு!
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி நேற்று நேவி மும்பையில் நடந்தது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக தீப்தி சர்மா 30 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு கேப்டன் அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில், ஹீலி 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். மூனி 20 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தஹீலா மெக்ராத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், வந்த ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி வரை நின்ற எல்லீஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதில், 18.1ஆவது பந்தில் பவுண்டரி, 2ஆவது 2 ரன்கள், 3ஆவது பந்தில் பவுண்டரி, 4ஆவது பந்தில் 0, 5ஆவது பந்தில் 1 ரன்கள் எடுக்க, கடைசி பந்தை எதிர்கொண்ட பெர்ரி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தாஅர். இறுதியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி 19 ஓவர்களில் 133 ரன்க குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற வேண்டும் – கங்குலி!
இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என்று கைப்பற்றியுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 9ஆம் தேதி நாளை நேவி மும்பையில் நடக்கிறது.