3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறும் ருதுராஜ் கெய்க்வாட் – முதல் 2 போட்டியில் ஓய்வு!
காயம் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்திய அணி 1-1 என்று தொடரை சமன் செய்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து வெளியேறினார். மேலும், இதுவரையில் காயம் குணமடையாத நிலையில் நாளை மறுநாள் 11 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இடம் பெறவில்லை. இந்த டி20 தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடர் வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் – ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென்; 4 ஆண்டுகளில் 4 டெஸ்ட்!
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் முகமது ஷமி இடம் பெற வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.