Asianet News TamilAsianet News Tamil

ENG vs IND: தப்பு பண்ணிட்டீங்க தம்பிங்களா.. ரோஹித், கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை

இங்கிலாந்தில் மாஸ்க் அணியாமல் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

bcci to issue warning to rohit sharma and virat kohli in england and here is the reason
Author
Leicester, First Published Jun 21, 2022, 8:38 PM IST

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஆடமுடியாமல் போனது.

அந்த கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ஜூலை 1ம் தேதி அந்தவொரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 

அதற்காக இந்திய அணி கடந்த ஜூன் 16ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. கொரோனா பரவல் குறைந்ததால் வீரர்களுக்கான பயோ பபுள் விதிகள் தளர்த்தப்பட்டாலும், சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களும் இங்கிலாந்தில் ரசிகர்களுடன் மாஸ்க் கூட அணியாமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதைப்பார்த்து பிசிசிஐ அதிருப்தியடைந்தது. ஏற்கனவே கொரோனா காரணமாகத்தான் அஷ்வின், இந்திய அணியுடன் இங்கிலாந்துக்கு செல்லவில்லை. குவாரண்டினை முடித்துவிட்டு இன்னும் 2 நாட்களில் இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்.

அப்படியிருக்கையில், ரோஹித், கோலி ஆகிய முக்கியமான வீரர்கள் மாஸ்க் கூட அணியாமல் அலட்சியமாக ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது அதிருப்தியளிக்கும் விஷயம். இந்த விஷயத்தில் ரோஹித், கோலியுடன் சேர்த்து இந்திய வீரர்கள் அனைவருக்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios