Asianet News TamilAsianet News Tamil

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி: நீங்களும் டீமுக்கு தேவை.. 4 சிறந்த வீரர்களுக்கு அணியில் இடம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட்பை வீரர்களாக 4 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

bcci takes 4 important players in india squad as standby players for icc world test championship final
Author
Chennai, First Published May 7, 2021, 8:17 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடத்தப்படுகிறது. 2019 ஆஷஸ் தொடர் முதல் நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களும் சாம்பியன்ஷிப்புக்கானது. இறுதி போட்டிக்கு முந்தைய கடைசி தொடர் முடிவில், புள்ளி  பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும். 

அந்தவகையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஃபைனலில் மோதுகின்றன. வரும் ஜூன் 18 முதல் 22ம் தேதி வரை ஃபைனல் நடக்கவுள்ளது.

bcci takes 4 important players in india squad as standby players for icc world test championship final

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரஹானே, ரோஹித், கில், மயன்க் அகர்வால், புஜாரா, விஹாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், சுந்தர், ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலர்களாக இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ராகுல் மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவரும் முழு ஃபிட்னெஸ் பெறவில்லை என்பதால் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

bcci takes 4 important players in india squad as standby players for icc world test championship final

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

ராகுல், ரிதிமான் சஹா.

ஸ்டாண்ட்பை வீரர்களாக 4 வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ரஞ்சி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களில் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச்சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவித்துவரும் அபிமன்யூ ஈஸ்வரன் எடுக்கப்பட்டுள்ளார். 

மேலும் ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுகளை வாரிக்குவித்த ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான், இந்திய டி20 அணியில் ஏற்கனவே இடம்பிடித்துவிட்ட கர்நாடகாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஸான் நாக்வஸ்வாலா என்ற வீரர் ஆகியோரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாண்ட்பை வீரர்கள்: அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios