இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆகிய இருவரும் நேரில் பார்த்து ரசித்துவருகின்றனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிசிசிஐ செயலாளரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் தொடரையும் வெல்ல முடியும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முன்னேற முடியும் என்பதால், வெற்றி கட்டாயத்துடன் இந்த போட்டியில் களமிறங்கி ஆடிவருகிறது இந்திய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில், உஸ்மான் கவாஜாவும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து அருமையாக பேட்டிங் ஆடிவருகின்றனர். உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவருகிறார். ஸ்மித் அரைசதத்தை நோக்கி ஆடிவருகிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி போட்டியை அகமதாபாத்தில் இருநாட்டு பிரதமர்களும் நேரில் பார்த்து ரசித்துவருகின்றனர். இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆகிய இருவரும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டிக்கு முன் வலம்வந்தனர்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் இரு அணி கேப்டன்களுக்கும் தொப்பியை வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து இந்த போட்டியை பார்த்து ரசித்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்துவருகின்றனர்.
ICC WTC: இந்திய அணிக்கு அச்சுறுத்தல்.. நியூசிலாந்தில் பட்டைய கிளப்பும் இலங்கை
போட்டிக்கு முந்தைய நிகழ்வின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது புகைப்படத்தை பரிசாக வழங்கினார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா. பிசிசிஐ செயலாளரும், நரேந்திர மோடி அமைச்சரவையில் முன்னணி அமைச்சரான அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தி மகிழ்ந்தார்.
