Indian Cricket Team New Jersey: இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்த ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டுகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்த புதிய ஜெர்சியை அணிய உள்ளது.

பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான ஜெர்சியை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் புதிய தோற்றத்தில் இருக்கும் படங்களைப் பகிர்ந்திருக்கிறது.

விராட் கோலி , சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் புதிய ஜெர்சியில் போஸ் கொடுத்துள்ளனர்.

Scroll to load tweet…

இந்திய அணியின் புதிய ஜெர்சி:

இந்திய அணியின் புதிய ஜெர்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன. தோள்பட்டை பகுதியில் உள்ள கோடுகளில் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கின் பராபதி மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறும்.

மூன்று போட்டிகளில் ஆடும் அணியே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளதைத் தவிர அணியில் எந்த மாற்றமும் இல்லை.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில் (வி.சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ரிஷப் பந்த் (வி.கே), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.