Asianet News TamilAsianet News Tamil

கொரோனா எதிரொலி.. ஐபிஎல்லை ஒத்திவைத்தது பிசிசிஐ

கொரோனா அச்சுறுத்தலின் எதிரொலியாக ஐபிஎல் 13வது சீசனை ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ. 

bcci confirms that ipl will be postponed from march 29 to april 15
Author
India, First Published Mar 13, 2020, 2:52 PM IST

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இத்தாலியில் அதன் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியாவில் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் நடத்தப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிரா மாநில அரசு, மும்பையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை தடை செய்தது. டெல்லி அரசு, டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதித்துள்ளது. 

bcci confirms that ipl will be postponed from march 29 to april 15

ஐபிஎல் நடத்துவது குறித்து விவாதிக்க நாளை(சனிக்கிழமை) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. பிரிஜேஸ் படேல் தலைமையிலான இந்த கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஐபிஎல் அணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் நடத்துவது குறித்து நாளை முடிவெடுக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்ததுள்ளது பிசிசிஐ. 

bcci confirms that ipl will be postponed from march 29 to april 15

வரும் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல், ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அப்போதும் தொடங்கப்படுமா என்பது உறுதியில்லை. 

வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர ஏப்ரல் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 29ம் தேதி தொடங்கியிருந்தாலும் கூட, ஏப்ரல் 15ம் தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடமுடியாத நிலை இருந்தது. இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசனின் தொடக்கமே ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது தொடங்கப்பட்டு நடத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

bcci confirms that ipl will be postponed from march 29 to april 15

Also Read - ஆர்சிபி வீரருக்கு கொரோனா டெஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த, டெல்லி அரசு தடை விதித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios