சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இத்தாலியில் அதன் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியாவில் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் நடத்தப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் நடத்துவது குறித்து நாளை(சனிக்கிழமை) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. 

கொரோனாவின் அச்சுறுத்தல் கடுமையாக இருந்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பதால் அவருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கேன் ரிச்சர்ட்ஸனை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற வீரர்களிடமிருந்து கேன் ரிச்சர்ட்ஸனை அப்புறப்படுத்தி, அவருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

Also Read - ஐபிஎல்லில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்த டாப் 10 வீரர்கள்

அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மெடிக்கல் ரிப்போர்ட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர்தான் அவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். கேன் ரிச்சர்ட்ஸனை ஆர்சிபி அணி இந்த சீசனிற்கு ரூ.4 கோடி கொடுத்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.