பிப்ரவரி 18ம் தேதி முதல் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 18ம் தேதி முதல் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு உள்நாட்டு போட்டி தொடர்கள் எதுவும் நடக்கவில்லை. நிலைமை சீரடைந்ததை அடுத்து, ஜனவரி 10ம் தேதி தொடங்கி சையத் முஷ்டாக் அலி தொடர் நேற்று(ஜன 31) முடிந்தது.

இந்நிலையில், உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. அதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடர் நடந்த பெங்களூரு, இந்தூர், கொல்கத்தா, மும்பை, பரோடா ஆகிய மைதானங்களில் விஜய் ஹசாரே போட்டிகளும் நடக்கவுள்ளன.

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி சையத் முஷ்டாக் அலி தொடரை நடத்திய அனுபவம் அந்த கிரிக்கெட் சங்கங்களுக்கு இருக்கும் என்பதால், விஜய் ஹசாரே லீக் போட்டிகளும் அங்கேயே நடத்தப்படுகின்றன.