இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர்..! பிசிசிஐ அறிவிப்பு
இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ.
இந்திய அணியின் கிட் ஸ்பான்ஸராக 2016லிருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020லிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்ஸராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது.
இந்திய அணியின் மெயின் ஸ்பான்ஸராக பைஜூஸ்நிறுவனம் இருந்துவருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ.
வரும் ஜூன் 7ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்
இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் உரிமையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.