உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியை நியூசிலாந்து ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி, ரோஹித், தவான், ராகுல், தோனி, கேதர், ஹர்திக், புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டுக்குத்தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பிங்கை மனதில் வைத்து தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜடேஜாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா.