T20 WC: நீயா நானா போட்டியில் பாக்.,- வங்கதேசம் பலப்பரீட்சை! அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்? டாஸ் ரிப்போர்ட்
டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறப்போகும் கடைசி அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. க்ரூப் 2ல் தென்னாப்பிரிக்கா கடைசி போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றதால் இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடுவதற்கு முன்பாகவே அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
தென்னாப்பிரிக்கா தோற்றதால் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியில் ஜெயிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இந்த முக்கியமான போட்டி அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
வங்கதேச அணி:
நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், டஸ்கின் அகமது, நசும் அகமது, எபாடட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிச் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி.