தம்பி, அஷ்வின்கிட்டயே வால் ஆட்டுறியா? உனக்கு இருக்கு கச்சேரி! வங்கதேச விக்கெட்கீப்பரை வச்சு செய்யும் ரசிகர்கள்
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வினை ஸ்டம்பிங் செய்வதற்கு முன் வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று(டிசம்பர் 14) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஷ்வினின் அபாரமான அரைசதங்கள் மற்றும் குல்தீப் யாதவின் அருமையான கேமியோவால் முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. புஜாரா 90 ரன்கள் அடித்து 10 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயரும் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் அஷ்வினும் குல்தீப்பும் அருமையாக பேட்டிங் ஆடினர். அவர்களது சிறப்பான பேட்டிங்கால்தான் இந்திய அணி 404 ரன்கள் அடித்தது. அஷ்வின் 58 ரன்களும், குல்தீப் 40 ரன்களும் அடித்தனர்.
எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேச அணி, குல்தீப் யாதவின் சுழல் மற்றும் சிராஜின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 102 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 133 ரன்கள் அடித்துள்ளது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் அருமையாக பேட்டிங் ஆடிய அஷ்வின் 58 ரன்களுக்கு மெஹிடி ஹசனின் சுழலில் ஆட்டமிழந்தார். மெஹிடி ஹசன் வீசிய பந்தை இறங்கி ஆட முயன்ற அஷ்வின் பந்தை அடிக்காமல் விட, அதை பிடித்த விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் உடனே ஸ்டம்பிங் செய்யாமல், பந்தை கையில் வைத்து சிறிது நேரம் சும்மா ஏய்ப்பு காட்டி பின் அடித்தார். நூருல் ஹசனின் செயல்பாடு ரசிகர்களுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.
அதனால் நூருல் ஹசனை டுவிட்டரில் ரசிகர்கள் விளாசிவருகின்றனர். அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்வதிலும், மன்கட் ரன் அவுட் வார்னிங் கொடுப்பதில் வல்லவர்; அதற்கே பெயர்போனவர் அஷ்வின். எனவே அதை சுட்டிக்காட்டி, நூருல் ஹசனை உஷார் என ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அவரது செயல்பாட்டை விமர்சித்தும் டுவீட் செய்துள்ளனர்.