Asianet News TamilAsianet News Tamil

IND vs BAN Test Match Day 3: பாலோ ஆன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா - வங்கதேசம் 150 ஆல் அவுட்!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெறும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்து 254 ரன்கள் பின் தங்கியுள்ளது.

BAN Scored only 150 runs against India in first test match
Author
First Published Dec 16, 2022, 11:26 AM IST

வங்கதேசத்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில், புஜாரா (90), ஷ்ரேயாஸ் ஐயர் (86), ரிஷப் பண்ட் (46), ரவிச்சந்திரன் அஸ்வின் (58) மற்றும் குல்தீப் யாதவ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்வின் மற்றும் யாதவ் ஜோடி அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது.

Ranji Trophy: மீண்டும் சதம் விளையாசி அதிரடி காட்டிய இஷான் கிஷான்!

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி கூடுதலாக 17 ரன்களை மட்டுமே எடுத்து 150 ரன்கள் குவித்த்து. இதன் மூலம் 254 ரன்கள் வங்கதேச அணி பின் தங்கிய நிலையில் பாலோ ஆன் கொடுக்காமல் தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

மோசமான கார் விபத்தில் சிக்கிய ஃப்ளிண்டாஃப்.. நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். தற்போது 254 முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2ஆவது இன்னிங்ஸை வெற்றிகரமாக விளையாடி வருகிறது. உணவு இடைவேளை வரையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 20 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 290 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவது முறையாக 5 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ்: பாலோ ஆன் தவிர்க்க போராடும் வங்கதேசம்!

Follow Us:
Download App:
  • android
  • ios