Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி எங்கள் வெற்றி பயணத்தை தொடங்குவோம்! பாக்., கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடங்குவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

babar azam believes that pakistan will start with win t20 world cup against india
Author
Pakistan, First Published Sep 5, 2021, 4:32 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. 

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றியுடன் டி20 உலக கோப்பை பயணத்தை தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பாபர் அசாம், டி20 உலக கோப்பையில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி தான் வலிமையுடன் இருக்கிறது. மேலும் கூடுதலான சாதக அம்சங்களும் பாகிஸ்தான் அணிக்கே உள்ளது. டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது, இந்திய அணிக்குத்தான் அதிக நெருக்கடி உள்ளது. 

ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் எங்களுக்கு சொந்த மைதானம் போல.. அதனால் இந்திய அணியை தோற்கடித்த எங்கள் பயணத்தை தொடங்குவோம் என்று பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios