ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. 

இந்தியாவுக்கு எதிராகவும் ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக தென்னாப்பிக்காவிடமும் தோல்வியை தழுவியது. அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

வரும் 13, 15, 20 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி, மைக்கேல் பவன், மைக் ஹசி, தோனி போன்ற ஒரு சிறந்த ஃபினிஷரை தேடிக்கொண்டிருப்பதாக ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஜஸ்டிங் லாங்கர், மைக் ஹசி, மைக்கேல் பவன் மாதிரியான சிறந்த ஃபினிஷர்களை நாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த வகையில், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதில் தோனியும் மாஸ்டர். இங்கிலாந்து அணிக்கு ஃபினிஷிங் பணியை செய்ய ஜோஸ் பட்லர் இருக்கிறார். அவர் அருமையான ஃபினிஷராக திகழ்கிறார். 

ஃபினிஷர் ரோல் என்பது மிக முக்கியமானது. அனைத்து அணிகளுமே சிறந்த ஃபினிஷரை தேடுகின்றன. இதுவரை இப்போதைய ஆஸ்திரேலிய அணியில் யாருமே ஃபினிஷருக்கான இடத்தை பற்றிக்கொள்ளவில்லை. ஒரு சிறந்த ஃபினிஷர் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

Also Read - கண்டவங்க பேசுறத பத்தியெல்லாம் கவலையில்ல.. ஆஸி., உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு டிரெண்ட் போல்ட் பதிலடி

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன் என டாப் ஆர்டர் சிறப்பாக உள்ளது. ஃபினிஷருக்கான தேவை இருப்பது உண்மைதான். அந்த இடத்தை அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி, ஷார்ட் ஆகியோரில் ஒருவர் அந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.