நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. மார்ச் 13, 15 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

இந்நிலையில், இந்த தொடர் ஒரு உப்புச்சப்பில்லாத தொடர் என்றும் இந்த நேரத்தில் இந்த தொடரை நடத்த தேவையில்லை என்றும் இந்த போட்டிகளை பார்க்க ரசிகர்கள் வரமாட்டார்கள் என்றும் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்திருந்தார்.

2015ல் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான மைக்கேல் கிளார்க், இப்படி தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது. 

இதையடுத்து, மைக்கேல் கிளார்க்கின் இந்த கருத்துக்கு டிரெண்ட் போல்ட் தக்க பதிலடி கொடுத்துள்ளார். மைக்கேல் கிளார்க் கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசிய டிரெண்ட் போல்ட், இந்த தொடர், ஏன் மொக்கையான தொடராக இருக்கும் என எனக்கு தெரியவில்லை. கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலியா மிகச்சிறந்த இடம். நியூசிலாந்தை விட ஆஸ்திரேலிய ஸ்டேடியங்கள் பெரியவை. கண்டிப்பாக இந்த போட்டிகளை காண ரசிகர்கள் கூட்டம் பெரியளவில் இருக்கும்.  ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங்குகளை எதிர்கொள்ள நான் ஏற்கனவே தயாராகிவிட்டேன். இது மிகச்சிறந்த தொடராக அமைய போகிறது. கண்டவர்கள் பேசுவதை பற்றி எனக்கு கவலையில்லை என்று டிரெண்ட் போல்ட் பதிலடி கொடுத்துள்ளார். 

Also Read - ஒரே சீசனில் டாப் 10ல் இடம்பிடித்த வெளிநாட்டு வீரர்.. ஓய்வுக்கு பிறகும் கோலோச்சும் சேவாக்.. ஐபிஎல் சுவாரஸ்யம்

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், டார்ஷி ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா. 

நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), மார்டின் கப்டில், ஹென்ரி நிகோல்ஸ், ரோஸ் டெய்லர், டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷம், காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், கைல் ஜேமிசன், இஷ் சோதி, மாட் ஹென்ரி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.