இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 டெஸ்ட்டிலும் தோற்று ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை ஜெயிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போதிருக்கும் நிலையில், இந்திய அணியிடம் ஒயிட்வாஷ் ஆவதை தவிர்க்கத்தான் ஆஸ்திரேலிய அணி போராட வேண்டும்.

அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களுக்கு ஹாரி ப்ரூக் தான் ரோல் மாடல்..! மைக்கேல் வான் புகழாரம்

முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி இரண்டே ஸ்பின்னர்களுடன் ஆடியது விமர்சனத்துக்குள்ளானது. ஸ்பின்னர் அஷ்டான் அகரை ஆடவைக்காதது விமர்சனத்துக்குள்ளானது. இந்திய கண்டிஷன் என்பதற்காக அதிகமான ஸ்பின்னர்களை ஆடவைக்காமல், ஆஸ்திரேலிய அணி அதன் பலத்திற்கு ஆடவேண்டும். எனவே ஃபாஸ்ட் பவுலர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை அதிகமாக பயன்படுத்தி ஆடவேண்டும் என்ற வலியுறுத்தல்களும் வலுத்தன.

3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும் நிலையில், அந்த டெஸ்ட்டில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய 2 பெரிய வீரர்கள் ஆடவில்லை. எனவே ஆஸ்திரேலிய அணி தேர்வு சவாலானதாக இருந்தாலும், அவர்களது இழப்பை ஈடுகட்டுமளவிற்கான வீரர்கள் உள்ளனர்.

டேவிட் வார்னர் காயம் காரணமாக ஆடாததால் உஸ்மான் கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக ஆடுவார். அதன்பின்னர் வழக்கம்போல 3ம் வரிசையில் லபுஷேன், 4ம் வரிசையில் ஸ்மித் மற்றும் 5ம் வரிசையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய மூவரும் ஆடுவார்கள். ஸ்மித் 3வது டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. 

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஃபாஸ்ட் பவுலராக மிட்செல் ஸ்டார்க் ஆடுவார். அவருடன் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் 2வது ஃபாஸ்ட் பவுலராக ஆடுவார். நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன் ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள்.

ஆஸி., வீராங்கனை எலைஸ் பெர்ரியை பார்த்து கத்துக்கமா நீ..! ஹர்மன்ப்ரீத் கௌரை கடுமையாக விளாசிய முன்னாள் கேப்டன்

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.