ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளார் என்பதால் 3வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளார் என்பதால் 3வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத ஆஸ்திரேலிய அணி சுருண்டதால் 3 நாட்களில் போட்டிமுடிந்தது. 

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உனக்கு இடம் இல்ல..! மறைமுகமாக சொன்ன பிசிசிஐ

3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூஸ்கார்ப் ரிப்பேட் எனும் இணையதளம் வெளியிட்ட செய்தியில் “ பாட் கம்மின்ஸ் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுகிறார். அவரின் குடும்பத்தினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக கம்மின்ஸ் ஆஸ்திரேலியா புறப்படுகிறார். 2 அல்லது 3 நாட்களில் இந்தியா திரும்பிவிடுவார் என்று ஆஸ்திரேலிய அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆஸ்திரேலியா சென்றபின்பு கம்மின்ஸ் அளிக்கும் தகவலின் அடிப்படையில் எப்போது வருவார் என முடிவாகும். 3வது டெஸ்டில் கம்மின்ஸ் விளையாடுவார் என்று நம்புகிறோம். ஆஸ்திரேலியாவில் இருந்து லெக் ஸ்பின்னர் மிட்ஷெல் ஸ்வீப்சன் இந்தியாவுக்கு வருகிறார். அவர் 3வது மற்றும் 4வது டெஸ்டில் விளையாடுவார் எனத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளது.

கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! துணை கேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ராகுல்

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 3வது டெஸ்டில் விளையாடாவிட்டால் நிச்சயம், அது அந்த அணிக்கு பின்னடைவாகத்தான் இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு சென்று சில நாட்களில் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார், 3வது டெஸ்ட் போட்டி தொடங்க 10 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஆதலால், கம்மின்ஸ் 3வது டெஸ்டில் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி மைதானத்தில் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டுபோல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். இந்தூர் மைதானமும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி என்பதால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இருக்கும்.
இதைக் கருத்தில்கொண்டே ஆஸ்திரேலிய அணி ஸ்வீப்சனை களமிறக்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் லெக்ஸ்பின்னர் ஸ்வீப்சன் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலத்தை பந்துவீச்சில் அளிக்கும்.

இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஒருபடி அருகே கொண்டு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்க முன்வராது. அதேசமயம், நியூஸிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தால் பைனலுக்கு நியூஸிவருவதை தடுக்கும்.