4 மாற்றங்களுடன் களமிறங்கிய இந்தியா; களத்தில் இறங்கும் புது மாப்பிள்ளை – ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங்!

இந்தியாவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Australia Have won the toss and choose to bowl against India in 4th T20 Match at Raipur rsk

இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த 3 போட்டிகளில் முறையே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

வெற்றியை நோக்கி வங்கதேசம் – 4 கைப்பற்றிய தைஜூல் இஸ்லாம்; நியூசிலாந்து 7 விக்கெட் இழந்து தடுமாற்றம்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் இஷான் கிஷான், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, ஷ்ரேயாஸ் ஐயர், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), முகேஷ் குமார், தீபக் சஹார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 29 ஆம் தேதி தேதி தான் முகேஷ் குமாருக்கு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் நடந்து ஒரு நாள் ஆன நிலையில், இன்று போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியா அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கைல் ரிச்சர்ட்சன், நாதன் எல்லிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் – ஆகாஷ் சோப்ரா!

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆஸ்திரேலியா:

ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மோட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிறிஸ் க்ரீன், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், தன்வீர் சங்கா.

IPL Auction 2024: மினி ஏலத்தில் டார்கெட் செய்யப்பட்ட வீரர்கள் யார் யார்? புட்டு புட்டு வைத்த சிஎஸ்கே நிர்வாகி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios