வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா – 3ஆவது போட்டியில் 6.5 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Australia beat West Indies by 8 Wickets difference in 3rd and Final ODI Match at Canberra rsk

ஆஸ்திரேலியா சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்று சமன் செய்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில், முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

உலக சிலம்பாட்ட போட்டி – 40 பதக்கங்களுடன் தமிழகம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டி செய்து 24.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக தொடக்க வீரர் அலைஸ் அதனாஸ் 32 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாய் ஹோப் 4 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்பு!

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே வெஸ்ட் இண்டீஸ் 86 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஜாக் ஃப்ரெசர் மெக்குர்க் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் எடுத்தது. இதில், மெக்குர்க் 41 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலிஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துக் கொடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios