இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்பு!

இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Indian Pacer Jasprit Bumrah likely to be rested from the 3rd Test against England in Rajkot due to Workload rsk

இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 (2) என்று சமன் செய்தது.

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு!

இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 255 ரன்கள் குவித்தது. பின்னர், 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் விளையாடி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி மட்டும் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

2ஆவது போட்டி கொடுத்த பொன்னான வாய்ப்பு – இந்தியா 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தப் போட்டியில் முகமது சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், முகேஷ் குமார் இடம் பெற்றார்.

பென் ஸ்டோக்ஸிற்கு பதிலடி கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் - எப்படி தெரியுமா?

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையில் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக முகமது சிராஜ் அணிக்கு திரும்ப இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், காயம் காரணமாக 2ஆவது போட்டியில் இடம் பெறாத கேஎல் ராகுலும் 3ஆவது போட்டிக்கு திரும்பக் கூடும் என்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

India vs England 2nd Test: ஒரு விக்கெட்டிற்காக கடுமையாக போராடிய அஸ்வின் – அடுத்த போட்டியில் சாதனை கன்ஃபார்ம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios