ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்த இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அந்த போட்டியில் தோற்றதால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பின் தங்கிய தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் மேலேறவும், இந்த தொடரை இழக்காமல், வெற்றி வாய்ப்பை தக்கவைக்கவும் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 2வது டெஸ்ட்டில் ஆடுகிறது.

ICC WTC: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை வலுவாக தக்கவைத்த இந்தியா

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நாளை(டிசம்பர் 26) தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

BAN vs IND: நானே அவுட்டான கடுப்புல இருக்கேன்.. இவனுங்க வேற..! வரிந்து கட்டிய கோலி.. வைரல் வீடியோ

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, தியூனிஸ் டி ப்ருய்ன், டெம்பா பவுமா, காயா ஜோண்டோ, கைல் வெரெய்ன், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.