டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் களமிறங்கும் ஆஸி., - நியூசி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடரின் தகுதிப்போட்டிகள் இன்றுடன் முடிந்த நிலையில், நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. தகுதிச்சுற்றில் க்ரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், க்ரூப் பி-யிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றன.
சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள அணிகள்:
க்ரூப் 1 - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார்.! கம்பீர் கூறும் சரியான காரணம்
க்ரூப் 2 - இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து
நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கும் நிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் அணிகள் இவைதான்.! முழு போட்டி விவரம்
உத்தேச நியூசிலாந்து அணி:
மார்டின் கப்டில், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன், ஆடம் மில்னே.