ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

டி20 உலக கோப்பைக்கு ஆட ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பை முடிந்த பின் அங்கேயே இருந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.

அடிலெய்டில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. 

பாகிஸ்தான் டி20 அணி கேப்டன்சியிலிருந்து பாபர் அசாம் விலகவேண்டும்! டி20 அணி கேப்டனாக அவரை நியமிக்கணும்-அஃப்ரிடி

2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றன.

சிட்னியில் நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் க்ரீன், அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

இவ்வளவு பிரேக் எதற்கு..? இந்நாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விளாசும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் டாவ்சன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, லூக் உட், ஆலி ஸ்டோன்.

சிஎஸ்கே கழட்டிவிட்ட கோபத்தை களத்தில் காட்டும் தமிழக வீரர்! விஜய் ஹசாரே தொடரில் ஹாட்ரிக் சதமடித்த ஜெகதீசன்