ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணி வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரும் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. செப் 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.

ஆசிய கோப்பை 2025

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்து விட்டன. அனைத்து அணி கேப்டன்கள், வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன்.

ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சஹிப்சாதா, ஃபர்ஜான், சஹிப்சாதா, ஃபர்ஜான், அப்ரிடி, சுஃப்யான் மொகிம்.

இலங்கை கிரிக்கெட் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷாரா, தசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சாமிகா கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷாரா, மதீஷ பத்திரனா.

வங்கதேச கிரிக்கெட் அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைப் ஹசன், டௌஹித் ஹ்ரிதாய், ஜாகர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், நுருல் ஹசன் சோஹன், மஹேதி ஹசன், ரிஷத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதின்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தார்விஷ் ரசூலி, சிதீகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷராஃபுதீன் அஷ்ரஃப், முகமது இஷாக், முஜிப் உர் ரஹ்மான், அல்லாஹ் கசன்பார், நூர் அகமது, ஃபரீத் மாலிக், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.

ஹாங்காங் கிரிக்கெட் அணி: யாசிம் முர்தசா (கேப்டன்), பாபர் ஹயத், ஜிஷான் அலி, நியாசகத் கான் முகமது, நஸ்ருல்லா ரானா, மார்ட்டின் கோட்ஸி, அன்ஷுமன் ராத், கல்ஹான் மார்க் சல்லு, ஆயுஷ் ஆஷிஷ் சுக்லா, முகமது ஐசாஸ் கான், அதீக் உல் ரஹ்மான் இக்பால், கின்சித் ஷா, ஆதில் மெஹமூத், ஹாரூன் முகமது அர்ஷத், அலி ஹசன், ஷாஹித் வாசிஃப், கசன்பர் முகமது, முகமது வாஹீத், அனாஸ் கான், எஹ்சான் கான்.

ஓமன் கிரிக்கெட் அணி: ஜதிந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்சா, வினாயக் சுக்லா, சூஃபியான் யூசுஃப், ஆஷிஷ் ஒடேதேரா, ஆமிர் காலீம், முகமது நதீம், சூஃபியான் மெஹமூத், ஆர்யன் பிஷ்ட், கரன் சோனாவாலே, சிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, ஃபைசல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவத்சவா.