Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டி அட்டவணை..! எந்தெந்த அணிகள் மோதல்..? இந்தியா, பாகிஸ்தானுடன் மோதப்போவது யார்..?

ஆசிய கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி அட்டவணையை பார்ப்போம்.
 

asia cup 2022 qualifier schedule teams and other facts
Author
Chennai, First Published Aug 4, 2022, 7:38 PM IST

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று போட்டியில் தகுதிபெறும் அணி ஆகிய 3 அணிகளும் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..! ஆகஸ்ட் 28ல் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி மோதுகின்றன. ஏ பிரிவில் இடம்பெறப்போகும் 3 அணியை தீர்மானிக்கும் தகுதிச்சுற்று போட்டி அட்டவணையை பார்ப்போம்.

ஏ பிரிவில் 3வது அணியாக இடம்பெற, சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய 4 அணிகளும் மோதுகின்றன. இவற்றில் ஒரு அணி தான் ஆசிய கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் மோதும் வாய்ப்பை பெறும். 

இதையும் படிங்க - WI vs IND: 4வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?

தகுதிச்சுற்று போட்டி அட்டவணை:

ஆகஸ்ட் 20: சிங்கப்பூர் - ஹாங்காங்

ஆகஸ்ட் 21: ஐக்கிய அரபு அமீரகம் - குவைத்

ஆகஸ்ட் 22: ஐக்கிய அரபு அமீரகம் - சிங்கப்பூர்

ஆகஸ்ட் 23: குவைத் - ஹாங்காங்

ஆகஸ்ட் 24: சிங்கப்பூர் - குவைத்

ஆகஸ்ட் 24: ஹாங்காங் - ஐக்கிய அரபு அமீரகம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios