இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த ஆஷ்டன் அகர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதியும், 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 9ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.350 கோடியில் இந்திய கிரிக்கெட் டீமுக்கு நியூ ஜெர்சி!
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், நடந்து முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவில் நடக்கும் Marsh Sheffield Shield தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 14 வயது சிறுமி வெண்கலப் பதக்கம்!
இதற்கு முன்னதாக முதல் டெஸ்டில் அணியில் இடம் பெற்றிருந்த மிட்செல் ஸ்வீப்சன், குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் அணியிலிருந்து விலகி நாடு திரும்பினார். ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் உறவினர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் நாடு திரும்பினார். இவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவார் என்று சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டேவிட் வார்னர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். ஜோஸ் ஹசல்வுட் காயம் சரியாகாத நிலையில், அணியில் இடம் பெறவில்லை.
தவறாக நடந்து கொண்டதாக நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு: பிருத்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு!
