AUS vs ENG: கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்றுவிட்ட பந்தை செமயா டைவ் அடித்து தடுத்த அஷ்டான் அகர்..! வைரல் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்றுவிட்ட பந்தை அபாரமாக டைவ் அடித்து பிடித்து மைதானத்திற்குள் வீசி 6 ரன்னை தடுத்தார் ஆஸ்திரேலிய வீரர் அஷ்டான் அகர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் க்ரீன், அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணியின் தோனிக்கு அடுத்த கேப்டன் இவர்தான்..! சர்ப்ரைஸ் தேர்வு
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் டாவ்சன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, லூக் உட், ஆலி ஸ்டோன்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்(6) மற்றும் ஃபிலிப் சால்ட் (14) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஜேம்ஸ் வின்ஸ்(5), சாம் பில்லிங்ஸ்(17), கேப்டன் ஜோஸ் பட்லர்(29), லியாம் டாவ்சன் (11), கிறிஸ் ஜோர்டான் (14) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய டேவிட் மலான் சதமடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்து டேவிட் மலான், 46வது ஓவர் வரை பேட்டிங் ஆடி 128 பந்தில் 134 ரன்களை குவிக்க, பின்வரிசையில் டேவிட் வில்லி சிறப்பாக ஆடி 34 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் (86), டிராவிஸ் ஹெட்(69) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 80 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அஷ்டான் அகர் அபாரமான ஒரு ஃபீல்டிங்கை செய்து அனைவரையும் மிரட்டிவிட்டார். இங்கிலாந்து இன்னிங்ஸின் 45வது ஓவரில் டேவிட் மலான் டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கியடித்த பந்து கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்றுவிட்டது. பவுண்டரி லைனை தாண்டி காற்றில் இருந்த பந்தை டைவ் அடித்து பிடித்த அஷ்டான் அகர், அவர் கீழே விழுவதற்குள்ளாக பந்தை மைதானத்திற்குள் வீசினார். அதனால் சிக்ஸரை தடுத்தார். அஷ்டான் அகரின் அபாரமான ஃபீல்டிங் வீடியோவை ஷேர் செய்து, அவருக்கு தலைவணங்குவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவீட் செய்துள்ளது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.