டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் 2023ல் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடுவார் என்று ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், அணி தேர்வு குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பவுலிங் யூனிட் குறித்த எதிர்பார்ப்புதான் அதிகமாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய சீனியர் பவுலர்களுடன் ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகியோரும், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் பவுலர்களும் இருக்கின்றனர். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள தீபக் சாஹர் அணிக்கு திரும்பினால், அவரும் இந்த போட்டியில் இருப்பார்.

இவர்களில் யார் யாருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதும் அணி தேர்வும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமியை அணி நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறியிருக்கிறார். முகமது ஷமி ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசினார். அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல முகமது ஷமி முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஷமி குறித்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி இடம்பெற வாய்ப்பில்லை. அவரது திறமை பற்றி அனைவருக்கும் தெரியும். டி20 உலக கோப்பையில் அவர் ஆடவில்லை என்றாலும், 2023ல் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடுவார்.

இந்த ஆண்டு அதிகமான ஒருநாள் போட்டிகள் இல்லை. அதனால் ஷமி ஐபிஎல்லுக்கு பின் ஓய்வில் இருக்கிறார். இங்கிலாந்தில் நடக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணி ஷமியை ஆடவைக்கலாம் என்று நெஹ்ரா கூறியுள்ளார்.