IND vs SL: ஃபீல்டிங்கின்போது பலத்த அடி.. எழவே முடியாததால் ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி செல்லப்பட்ட இலங்கை வீரர்..!

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது, இலங்கை வீரர்கள் வாண்டர்சே மற்றும் பண்டாரா ஆகிய இருவரும் மோதியதில் பண்டாராவிற்கு காயம் ஏற்பட்டு, அவரால் எழவே முடியாததால் ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி செல்லப்பட்டார்.
 

ashen bandara stretchered off the ground after collided with vandersay during fielding in india vs sri lanka third odi

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்றுவிட்டதால் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் கோலியும் இணைந்து 131 ரன்களை குவித்தனர். சதமடித்த கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

டி20 அணியில் ரோஹித், ராகுல் 2 பேருமே வேண்டாம்.. அவங்க 2 பேரும் தான் நிரந்தர ஓபனர்கள்..! கம்பீர் அதிரடி

அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 46வது சதத்தை விளாசி சாதனை படைத்தார் கோலி. இந்த தொடரில் 2வது சதத்தை அடித்து கோலி அசத்தினார். கோலியும் சதமடிக்க, இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது.

இந்திய அணி பேட்டிங்கின்போது சாமிகா கருணரத்னே வீசிய 42வது ஓவரின் 5வது பந்தை கோலி பவுண்டரியை நோக்கி அடிக்க, அதை தடுக்க இலங்கை வீரர்கள் வாண்டர்சே மற்றும் பண்டாரா ஆகிய இருவரும் முயற்சித்தனர். இருவரும் எதிரெதிர் திசையில் இருந்து பந்தை பிடிக்க ஓடிவந்தபோது மோதிக்கொண்டனர். பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது. ஆனால் வாண்டர்சே - பண்டாரா மோதியதில் பண்டாராவிற்கு முழங்காலில் கடும் காயம் ஏற்பட்டது. அவரால் எழக்கூட முடியாமல் மைதானத்திலேயே படுத்துவிட்டார். வாண்டர்சே கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுந்து நின்றார். ஆனால் பண்டாராவால் எழவே முடியாததால் ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். பண்டாரா இலங்கை அணியின் முக்கியமான பேட்ஸ்மேன். அவருக்கு காயம் ஏற்பட்டது அந்த அணிக்கு பின்னடைவு. 

மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்

ஏற்கனவே இந்திய அணி 370 - 380 என்ற பெரிய ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், தங்கள் அணி வீரர் ஒருவர் காயமும் அடைந்தது இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios