இந்தியா தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணமா? மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான நோ பால் மன்னன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் நோ பால் வீசியது மட்டுமின்றி அந்த ஓவரில் அதிகபட்சமாக 27 ரன்கள் கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செயதது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பார் கான்வே 35 பந்துகளில் 52 ரன்னும், மிட்செல் 30 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 59 ரன்னும் (நாட் அவுட்) எடுத்தனர்.
ஹாட்ரிக் நோ - பால்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்
பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் கைப்பற்றி 20 ரன்கள் விட்டுக் கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஷிவம் மவி 2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆனால், சமீப காலமாக அதிக நோபால் வீசி வரும் நோபால் மன்னன் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு நோபால் மற்றும் 2 வைடு அடங்கும். ஒரேயொரு விக்கெட் எடுத்தார்.
நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் வரையில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். டேரில் மிட்செல் பேட் செய்தார். முதல் பந்தையே நோபாலாக வீசு, அதில் சிக்சரும் அடிக்கப்பட்டது. மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தில் சிக்சர், 2ஆவது பந்திலும் சிக்சர் அடித்தார். 3ஆவதில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 4ஆவது பந்தில் ரன் இல்லை. 5ஆவது பந்தில் 2 ரன்னும், 6ஆவது பந்திலும் 2 ரன்னும் எடுக்கப்பட்டது. இந்த கடைசி ஓவரில் மட்டும் மொத்தமாக 27 ரன்கள் கொடுக்கப்பட்டது. அதுவரையில் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மிட்செல், கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க மொத்தமாக 59 ரன்கள் எடுத்தார். இதில், கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
மூன்று ஓவர்கள் வரையில் 24 ரன்கள் கொடுத்திருந்த அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்கள் வாரி கொடுத்ததன் மூலமாக மொத்தம் 4 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதே போன்று தான் இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அர்ஷ்தீப் சிங் 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில், 5 நோபால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் நோபால் வீசிய மோசமான பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதெ நிலை தான் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நடந்துள்ளது. நியூசிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், டுவிட்டரில் அர்ஷ்தீப் சிங்கை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்....
#arshdeepsingh
Man of the Match of todays game..@arshdeepsinghh
Maiden over in batting and Half century in bowling in just 24 balls at a strike rate more than 200.
What a gem!#INDVsNZT20 #arshdeepsingh pic.twitter.com/sSH9jx7Oth
#arshdeepsingh pic.twitter.com/PybTpX1dQ6