Womens U19 T20 World Cup: 100 ரன்னை கூட அடிக்க முடியாமல் அரையிறுதியில் தோற்ற ஆஸி.,! இங்கிலாந்து த்ரில் வெற்றி
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி போட்டிகள் இன்று நடந்தன. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்
2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை கிரேஸ் 20 ரன்களும், பின்வரிசையில் அலெக்ஸா ஸ்டோன்ஹௌஸ் 25 ரன்களும் அடித்தனர். 9ம் வரிசையில் இறங்கிய ஜோஸி க்ரௌவ்ஸ் 15 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே அடித்தது.
100 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 18.4 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
வரும் 29ம் தேதி நடக்கும் ஃபைனலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.