டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்
முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் புறக்கணிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து இந்திய அணி தேர்வாளர் ஸ்ரீதரன் சரத் விளக்கமளித்துள்ளார்.
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான், தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்துள்ளார் சர்ஃபராஸ் கான்.
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி ஏராளமான ரன்களை குவித்துவருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. டான் பிராட்மேனுக்கு அடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் 80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் வீரர் சர்ஃபராஸ் கான் தான். அப்படியிருக்கையில், அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகிய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். தொடர்ச்சியாக சதங்களாக விளாசி அசத்திவருகிறார். டெல்லிக்கு எதிரான போட்டியில் ரஞ்சி போட்டியில் கூட 125 ரன்களை குவித்தார்.
சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் அசாதாரணமான பேட்டிங்கை தொடர்ச்சியாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் எடுக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் எடுக்கப்படுகிறார் என்றால், ஒரு இடம் காலியாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றால், டெஸ்ட் அணியை பொறுத்தமட்டில் அந்த இடத்திற்கு சூர்யகுமாரை விட, சர்ஃபராஸ் கானே தகுதியான வீரர் என்பதே அனைவரின் கருத்து.
ஊர்க்கார பிளேயரை அந்தந்த ஊரில் ஆடவைத்தால் டீம் என்ன ஆகுறது..? கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்
சர்ஃபராஸ் கானின் புறக்கணிப்பு கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவரே தனது புறக்கணிப்பு குறித்த வலியையும் வேதனையையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து முதல் முறையாக இந்திய அணி தேர்வாளர் ஒருவர் மௌனம் கலைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தேர்வாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் சரத், சர்ஃபராஸ் கான் கண்டிப்பாக எங்கள் கவனத்த்தில் உள்ளார். அவருக்கான இடம் கண்டிப்பாக கிடைக்கும். அணியை தேர்வு செய்யும்போது, அணியின் பேலன்ஸை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் சர்ஃபராஸுக்கான இடம் கண்டிப்பாக கிடைக்கும் என்றார் ஸ்ரீதரன் சரத்.