Asianet News TamilAsianet News Tamil

ரியாக்‌ஷனில் காவ்யா மாறனை மிஞ்சிய அனுஷ்கா சர்மா – வைரல் புகைப்படங்கள்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

Anushka Sharma Reaction is trending in Social media During RCB vs GT 52nd IPL 2024 Match at M Chinnaswamy Stadium rsk
Author
First Published May 5, 2024, 9:15 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே உரிமையாளர்கள், வீரர்களின் மனைவிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அணி விளையாடுவதைக் கண்டு அணியின் உரிமையாளர்கள் ஒவ்வொரு விதமாக ரியாக்‌ஷன் கொடுப்பார்கள். அதே போன்று தான் பவுண்டரி, சிக்சர், விக்கெட் எடுக்கும் போதும் வீரர்களின் மனைவிகளும் பல்வேறு விதமாக ரியாக்‌ஷன் கொடுப்பார்கள்.

அதில் அணியின் துணை உரிமையாளராக காவ்யா மாறன், ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனிலிருந்து திரும்ப வந்த அனுஷ்கா சர்மா, கடந்த மே 1 ஆம் தேதி தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

 

 

இந்த பிறந்தநாள் கொண்டாடட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல், ஃபாப் டூப்ளெசிஸ் ஆகியோருடன் கணவர் விராட் கோலியும் பங்கேற்றார். பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதையடுத்து, நேற்று ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இது ஆர்சிபிக்கு முக்கியமான போட்டி.

ஆதலால், டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து குஜராத் டைட்டன்ஸ் தடுமாறியது. இதில் கேப்டன் சுப்மன் கில் ஃபார்மில் இல்லை. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். ஆர்சிபி பவுலர்கள் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

 

 

ஷாருக் கானை ரன் அவுட் செய்த விராட் கோலி அனுஷ்கா சர்மாவிற்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். இதே போன்று ஆர்சிபி வீரர்கள் விக்கெட்டுகள் எடுக்கும் போது அனுஷ்கா சர்மா ஆரவாரம் செய்தார். பின்னர் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த நிலையில் கை தட்டி பாராட்டு தெரிவித்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்த போது கை விரலை கடிப்பது போன்று செய்தார். இறுதியாக ஆர்சிபி வெற்றி பெற்ற போது எழுந்து நின்று பாராட்டினார்.

 

 

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios